பீகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்த கொடூரமான விபத்து சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் இருந்த நிலையத்தில், ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் தவறுதலாக இறங்கிய ஆடுகள் மோதி சென்றது. ரயிலில் மோதி, ஆடுகள் துண்டு துண்டாக நசுங்கி உயிரிழந்தது போன்ற காட்சிகள், இணையத்தில் பரவி மக்களின் உள்ளங்களை பாதித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. குறித்த வீடியோவில், மக்கள் ரயில் நிலையத்தில் இயல்பு போல் நடமாடும் காட்சியுடன் தொடங்குகிறது. பின்னர் திடீரென, தூரத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் ஹாரன் சத்தம் கேட்டவுடனே, சில ஆடுகள் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் குதித்து ஓடுவது தெரிகிறது.
அடுத்த சில நொடிகளில், அதிவேக ரயில் பாய்ந்து வந்ததில், ஆடுகள் மீது மோதி உடல் உறுப்புகள் தண்டவாளம் முழுவதும் சிதறி உயிரிழந்தது. சிலர் இந்தக் காட்சியை நேரில் பார்த்தபோது நடுங்கியதாகக் கூறுகின்றனர். வீடியோவில், தண்டவாளம் இரத்தத்தில் சிவந்து காணப்படுவது போன்ற காட்சிகளும் உள்ளன.
https://www.facebook.com/piyush.dhaka.00?ref=embed_video&locale2=en_US
இந்த வீடியோ முதலில் “South South” என்ற ஃபேஸ்புக் பக்கம் மூலம் பதிவேற்றப்பட்டது. அது மில்லியன்களுக்கேற்ப பார்வைகள், பகிர்வுகள், மற்றும் கருத்துக்களை பெற்றுள்ளது. ஒரு பயனர், “ஏழை ஒருவரின் ஆடுகள் இழந்துபோனது மிகவும் வேதனைக்குரியது. மக்கள் வீடியோ எடுப்பதில் மட்டும் ஈடுபடுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “பாவம் அந்த அப்பாவி விலங்குகள்…” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
