மத்தியப் பிரதேசத்தின் சாந்தர்பூர் மாவட்டத்தில் ஒரு ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பல முறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி, அவர் தனது மனைவியை கைவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு மருத்துவர் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், இரவு 8 மணிக்கு அழைத்து வருமாறு அவர்கள் கூறினர். இதனால், அந்தப் பெண்ணின் கணவர் மிகவும் ஏமாற்றம் அடைந்து வேறு வழியின்றி, தனது கர்ப்பிணி மனைவியை மீண்டும் கைவண்டியில் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

“>