ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லேரு மாவட்டத்தில் சிந்தேரு வீதி பகுதியில் விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் மகிழ்ச்சியாக நடனமாடி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அப்போது திடீரென ஒரு ஸ்கார்பியோ கார் கூட்டத்தில் புகுந்தது. அந்த காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் வேகமாக வந்து அவர் கூட்டத்தின் மீது மோதியதில் இரண்டு பக்தர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

காய்மடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு பிறகு கார் ஓட்டுநரை பிடித்து கிராம மக்கள் ஆத்திரத்தில் தாக்கினர். மேலும் இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.