இந்தி மற்றும் மராத்தி சீரியல்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் பிரியா மராத்தே (38). இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருடைய மறைவுக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பெரும் சோகத்திலும் உள்ளனர்.
