சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ஒரு ப்ராங்க் வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது ஏதோ ஒரு ஹாஸ்யம் அல்லது சிரிப்புக்குரிய சம்பவமல்ல, மாறாக, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில்வே நிலையத்தில், ஒரு வாலிபர் லைக்குக்காக மற்ற பயணிகளின் நேரத்தையும், மன அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார்.

 

வீடியோவில், ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பிளாட்ஃபாரத்தில் ரயில் நின்றிருக்க, அந்த வாலிபர் மாவு பையை தூக்கிக்கொண்டு ரயிலில் ஏற முயல்கிறார். இதையடுத்து அந்த வாலிபர் மாவு பையை தவறி கீழே போட்டது போல நடித்தார். இதனால் அந்த மாவு அங்கிருந்தவர்கள் மீது கொட்டியது. இதில் பயணிகள் அனைவரும் மீதும் மாவு கொட்டியது.

இந்த வீடியோவை @ChapraZila என்ற X பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை இதை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். “லைக்குகளுக்காக இப்போது எல்லாம் எந்த அளவுக்கு தாழ்வடைகிறோம்!” என ஒருவர் ஆவேசமாக கூறியிருந்தார்.