தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி, சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர்.
மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், தமிழில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் நுழைந்து, அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்து, பின்னர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அவர் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் 67வது பிறந்தநாள் நேற்று (ஆக.29) அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், ஷாலினி அஜித்தும் அவரின் ரசிகர்களில் ஒருவராகிறார்.
View this post on Instagram
“>
இதனை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு சிறப்பு பதிவை வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
