திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலால் பரந்த வளர்ச்சியடைந்துள்ளதோடு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதன் மையப்பகுதியான மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், விபச்சாரக் கும்பல்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன என பொதுமக்களும், வியாபாரிகளும் புகார் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக காமாட்சி அம்மன் கோவில் வீதி பகுதிகளில், கடைவாசல் மற்றும் சந்துகளில் விபச்சாரப் பெண்கள், பேருந்து நிலையம் வந்த ஆண்களை சிக்கவைத்து, பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
தற்போது இந்தச் செயல்களில் இன்னும் ஒரு பரிதாபகரமான கட்டத்திற்கு விஷயம் சென்றுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், சில இளம் பெண்கள் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கடை வாசல்களில் மது அருந்தி போதையில், தனியாகச் சென்ற வாலிபர்களிடம் முத்தமிட்டு, அவர்களை அருகிலுள்ள சந்துகளில் உள்ள மறைவான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகைச் செயல்கள் திருப்பூர் நகரத்தின் மதிப்பை கெடுக்கக்கூடியவை என்றும், மக்கள் பாதுகாப்பு நேரடி அபாயம் ஏற்படுகின்றது என்றும் வலியுறுத்தியுள்ள அந்தப்பகுதி மக்கள், காமாட்சி அம்மன் கோவில் வீதி, எம்.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதைப் பொருட்படுத்தி, போலீசார் விரைவில் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொது மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
