சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு கார் சாலையில் சாதாரண வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்னால் மற்றொரு கார் மிக அதிக வேகத்தில் வந்து முன்னால் சென்ற காரை முந்த முயற்சிக்கிறது.

இந்த முயற்சியில், வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதி இரண்டு கார்களும் விபத்தில் சிக்கி, வெடித்து சிதறுகின்றன. இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது வைரலாகி, பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.