ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க இந்தியாவை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்.

இதேவேளை, மோடியை நேரில் பார்த்த ஒரு இந்தியப் பெண் தனது உணர்ச்சிகளை தாங்க முடியாமல் கதறியபடி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. “தூரத்திலிருந்து மோடி நடந்து  வரும்போது பார்த்தேன்… அப்பா மாதிரி ஒருவர் நம்மள பாத்து வரற மாதிரி தோணிச்சு… எனக்கு பிளாக்அவுட் ஆகிவிட்டது…” எனக் கூறி தனது கண்ணீர் கலந்த உரையை அந்த பெண் பகிர்ந்துள்ளார்.

“>

 

மோடியின் வருகைக்கு நன்றி தெரிவிக்க ஜப்பான் வாழ் இந்தியர்கள் கூடியிருந்தனர். அவர்களில் பலர் கலாசார ஆடைகள் அணிந்து வந்திருந்தனர். “மோடி இருக்கிறதால்தான் நாம ஜப்பானில் பாதுகாப்பாக வாழறோம்” என அந்தப் பெண் தனது பெருமிதத்தைப் பகிர்ந்ததும் அனைவரையும் உருகச் செய்தது.

“>

 

மேலும், ராஜஸ்தானி ஆடையில் ஜப்பான் மகளிர் ‘பதாரோ ம்ஹாரே தேஷ்’ என வரவேற்பு தெரிவித்தனர். அதோடு, பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், மோகினியாட்டம், ஓடிசி மற்றும் கதக் ஆகியனவும் நிகழ்த்தப்பட்டன.

“>

 

இந்த வரவேற்பால் நெகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய கலாசாரத்தை காத்து ஜப்பான்  சமூகத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழும் நம் புலம்பெயர் மக்களுக்கு நன்றி! அவர்களின் பாசமும் அன்பும் என்னை ஆழமாக தொட்டது” என X  பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜப்பான் பயணத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் தியென்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.