ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் ஜப்பான் நாட்டவர்களும் இந்திய புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து மிகவும் ஆன்மீகத்துடன் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில், ஜப்பானியர்களால் காயத்ரி மந்திரம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டதுடன், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்திய தேசியக் கொடிகளுடன்  “வந்தே மாதரம்” என கோஷமிட்ட அவர்கள், பிரதமரின் வருகையை விமான நிலையத்தையே ஆனந்தச் சூழலாக மாற்றியுள்ளது.

“>

 

இந்த வரவேற்பின் சிறப்பு அம்சமாக, பாரம்பரிய இந்திய சேலை அணிந்திருந்த ஜப்பான் பெண்கள், “பதாரோ ம்ஹாரே தேஷ்” (என் தேசத்திற்கு வரவேற்கிறேன்) என ராஜஸ்தானி பாணியில் பிரதமரிடம் கை கூப்பி, அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

இந்த பெண்களில் ஒருவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஹிந்தி மொழியை பயின்று வருவதாகவும், ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பஜன்களும் பாடக் கற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடி, அவரிடம் ஒரு பஜனை பாடுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, “மை வாரி ஜாவு ரே” என்ற ராஜஸ்தானி பஜனை அவரது வாயிலிருந்து கேட்டதும், அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

“>

இந்த நிகழ்வின் முக்கியக் கணங்களை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ஜப்பானில் சிறப்பு வரவேற்பு” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோ, இந்தியா-ஜப்பான் இடையிலான பாரம்பரிய உறவுகளுக்கும் கலாசார ஒற்றுமைக்கும் சாட்சி என வர்ணிக்கப்படுகிறது.

இந்த வருகை இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான நாகரிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.