இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘Slapgate’ சம்பவத்தின் வீடியோ 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

2008-ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில், கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியபின், மரியாதை நிமித்தமாக கை கொடுக்கும்  தருணத்தில், மும்பையின் இடைக்கால கேப்டனாக இருந்த ஹர்பஜன்சிங், பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்தை அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வீடியோவை முன்னாள் IPL தலைவர் லலித் மோடி, மைக்கேல் கிளார்க் நடத்தும் “Beyond23 Cricket Podcast” நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார். “நான் ஃபீல்டில் நடக்கும்போது பாதுகாப்பு கேமரா இயங்கிக் கொண்டிருந்தது. அதில் ஹர்பஜன் ஸ்ரீசாந்திடம் ஏதோ  சொன்னார், பின்னர் பின் கையால்  அறைந்தார். இதுதான் உண்மை” என்று மோடி கூறியுள்ளார்.

“>

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்ரீசாந்த் நேரலைக்கே கண்ணீர் விட்டபடி அழுத காட்சி வெளியாகி இருந்தது. ஹர்பஜன்சிங்கிற்கு IPL சீசனில் மீதமிருந்த போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது இருவரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த வீடியோ மீண்டும் வெளியானது ரசிகர்களிடையே பழைய IPL நினைவுகளை  நினைவூட்டும் வகையில் வைரலாகி வருகிறது.