பாகிஸ்தானில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த நபர், நடுவீதியில் பயங்கரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், வெள்ளை நிற புர்கா அணிந்து சென்ற பெண் ஒருவரை சாலையில் யாரும் இல்லாத தருணத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், நேரடியாக அவர் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்துகிறார். பெண்ணின் தனிப்பட்ட இடத்தை கையால் தொடும் அந்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

“>

 

இந்த சம்பவம் பாகிஸ்தானின் எந்த பகுதியில் நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், இது X  தளத்தில் “Ghar Ke Kalesh” என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டது.  பலரும் அதைப் பார்த்து கோபம், வருத்தம் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர். “இவரை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்” எனக் கூறியவர்களும், “இதுபோன்ற காமவெறி கொண்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டியது அவசியம்” என பதிவிட்டவர்களும் உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  தற்போது இந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இப்படிப் பட்ட கொடூர சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் தேவை என சமூக வலைதளங்கள் முழுக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.