பிரிட்டனைச் சேர்ந்த டெர்ரி  மற்றும் ரயான் என்ற தம்பதியினரின் வித்தியாசமான உறவு குறித்து ‘லவ் டோன்ட் ஜட்ஜ்’ யூடியூப் சேனலில் வெளியான பேட்டி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தம்பதிகள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதை வலியுறுத்துவார்கள். ஆனால், இந்த தம்பதியோ தங்கள் உறவை ஒரு புதிய பாணியில் அமைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

ரயான், மற்ற ஆண்களுடன் ஆபாச வீடியோக்களில் நடிக்கிறார், இதை டெற்றி எந்த ஆட்சேபனையுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அந்த வீடியோக்களை அவரே படமாக்குகிறார். இந்த தொழிலை தம்பதியர் ஒரு தொழில்முறை வேலையாகவே பார்க்கின்றனர்.

ரயான் தாம் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்றும், பணம் சம்பாதிக்கவே இந்த வேலையை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாதம் 2,000 முதல் 6,000 பவுண்டுகள் (அதாவது 2 முதல் 6 லட்சம் ரூபாய் வரை) வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்.

டெர்ரியும் இதே துறையில் பணியாற்றுவதால், சில வீடியோக்கள் மூலமே பல மாதங்களுக்கு தேவையான வருமானத்தை பெறுவதாக தெரிவிக்கிறார். ஆனால், இவர்களின் தொழில் தேர்வு குறித்து பலர் விமர்சித்து, LGBTQ+ சமூகத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த தம்பதியர், தங்கள் தொழிலுக்கும் உறவுக்கும் தெளிவான எல்லைகளை வைத்திருப்பதாகவும், எந்த அசௌகரியமும் ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசுவதாகவும் கூறியுள்ளனர்.