உடலை மெலிந்ததாகவும் அழகாகவும் காட்டும் ஆர்வத்தில் பலர் ஜிம் செல்வதும், உடற்பயிற்சி செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது இடுப்பை மிகவும் மெல்லியதாக மாற்றிக்கொள்ள எல்லா விலா எலும்புகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டதாக அதிர்ச்சிகரமான பேசி  வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், அந்த பெண், “இது நடந்தது 15 நாட்களுக்கு பிறகு தான், நான் உலகில் முதலாவது இப்படி செய்த பெண்” என கூறுவதோடு, ஒரு பிளாஸ்டிக் பையை காட்டி, அதில் தான் தனது எலும்புகளை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன் என கூறுகிறார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @254newsofficial என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 27 லட்சத்திற்கும் அதிக முறை பார்க்கப்பட்டுள்ளதோடு, 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். “ஒரு பர்ஃபெக்ட் பிகர் வேண்டும் என்ற ஆர்வத்தில், பெண் தனது எல்லா விலா எலும்புகளையும் அகற்றிக் கொண்டு, அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்” எனக் கேப்ஷன் இடப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by 254 News (@254newsofficial)

“>

ஆனால், இந்த வீடியோ உண்மையா அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டதா என்ற விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். ஒருவரின் கருத்துப்படி, “பின்னணி கதவின் வடிவத்தைக் கவனித்தால் ஃபில்டர் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது” என்றார். மற்றொருவர், “அவள் பின்னால் உள்ள மேசை சாய்ந்து இருப்பது போல காட்சி வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், சிலர், “இந்த வீடியோவைப் பார்த்தாலே எங்கள் எலும்புகளில் வலி ஏற்படுகிறது”, “விலா எலும்புகளை எதற்காக எடுத்தாய்? சூப் செய்வதற்காகவா?” என்று சாடி வருகின்றனர். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.