சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. வீடியோவில், மனைவி தனது கணவரிடம் “ஷாம்பெயின் கண்ணாடியில் இருந்த பந்தை கையால் தொடாமல், மேசையில் வைக்கப்பட்ட ஜாரில் போட வேண்டும்” என்று சவால் விடுக்கிறார். இதை முடித்தால் மேசையில் இருந்த பணத்தை வெல்லலாம் என்றும் கூறுகிறார்.

முதலில் கணவன் சாமர்த்தியமாக பந்தை கோப்பையில் சிக்க வைத்து, அதை சறுக்கச் செய்து ஜாருக்குள் போட முயன்றார். ஆனால் மனைவி, “ஜாரை இடம் மாற்றக் கூடாது” என்று கண்டிப்பாகச் சொன்னதால் சவால் இன்னும் கடினமானது. இருந்தாலும், கணவன் புத்திசாலித்தனமாக யோசித்து பந்தை ஜாருக்குள் போட வெற்றியடைந்தார். இதைப் பார்த்த மனைவியின் ஆச்சரியமான ரியாக்ஷன் தான் வீடியோவில் ஹைலைட்டாக இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Aparana (@mr_mrs_op)

“>

இந்த நகைச்சுவையான வீடியோவை இன்ஸ்டாகிராமில் @mr_mrs_op என்ற கணக்கில் பகிர்ந்துள்ளனர். இதுவரை இந்த வீடியோவை 3 கோடி முறை பார்வையிட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “பிஜிக்ஸ் ஸ்டூடென்ட் மாதிரி ட்ரிக்கா முடிச்சாரு”, “முதல் தடவைக்கு கணவன் வெற்றி, மனைவி மவுனம்”, “முழு ஆண் சமூகம் கொண்டாடும் தருணம்” என நெட்டிசன்கள் கிண்டலும் பாராட்டும் கலந்த கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.