பாடல் எனும் கலையை பலரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் சிலரின் குரலில் இருக்கும் தனிச்சிறப்பு தான் ரசிகர்களை ஈர்க்கும். இந்த வரிசையில், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. லதா மங்கேஷ்கரின் அழகான படலை மீண்டும் பாடி அனைவரையும் மகிழ்விக்கிறார் பூஜா என்ற பெண்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pooja Kattha (@pooja_katha25)

இந்த வீடியோவில், பாரம்பரிய புடவையில் அமைதியாக அமர்ந்துள்ள பூஜா, தனது குரலில் மிகுந்த உணர்வுடன் அந்த பழைய ஹிந்தி பாடலை பாடுகிறார். அவர் மிகவும் உணர்வு பூர்வமாக இந்த பாடலை பாடுகிறார். இதனால் தான் பலர் அவரது பாடலை ரசித்து பாராட்டுகிறார்கள். இதுபோல் ஒரு எளிமையான வகையில் பாடி, மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார் பூஜா.

பூஜாவின் இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் *pooja\_katha25* என்ற ஐடியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட பேர் லைக் செய்து கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். “உங்கள் சுருதி, உங்கள் நடை, உங்கள் மன அமைதி என அனைத்தும் ஒரு உண்மையான கலைஞரின் அடையாளம்,” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இதுபோல் ஒரு பாடல் நேரடியாக ஆத்மாவை தொடுகிறது,” எனக் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது உண்மையான இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று.

ள்ளது.