ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், சாலையில் சென்ற பெண்களை தவறான முறையில் தொடர்ந்தும், மயிலிறகை பயன்படுத்தி அவர்களை தொட்டும் தொந்தரவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மக்களிடம் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bike no. TS 13 ES 1865@CPHydCity @hydcitypolice
These 3 pieces of shit were following the girls in front of them and touching them with the peacock feather till I pulled down the window & yelled at them. Would’ve chased them further but the car in front of me didn’t give way pic.twitter.com/pqtOdnSKTr
— Aniketh Shetty (@AnikethShetty1) August 25, 2025
இந்த நிலையில், அந்த பெண்களை காப்பாற்றிய தம்பதியராக அனிகேத் ஷெட்டி மற்றும் அவரது மனைவி தைரியமாக தலையிட்டு அந்த இளைஞர்களை கண்டித்தனர். “ஏய், என்ன பண்றீங்க? ஏன் இவங்களை தொல்லை பண்றீங்க?” என்று கார் ஜன்னல் வழியே அவர்களை உரத்த குரலில் விசாரித்தனர். இந்த காணொளியை அவரது மனைவி பதிவுசெய்து, இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேத்தையும் பதிவு செய்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எதிராக சமூகத்தில் கடும் கோபம் கிளம்பியுள்ளது. இதனையடுத்து, சைபராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து, மத்தியபூர் போலீசார் மூன்று பேரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தைரியமாக செயல்பட்ட அனிகேத் ஷெட்டிக்கும், வீடியோ பதிவுசெய்த அவரது மனைவிக்கும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளைக் தெரிவித்து வருகின்றனர்.
