ஆந்திர மாநிலம் ஆத்மபூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 7 ஆண்டுகளாக வனஜா என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது திறமை மற்றும் மாணவர்களை அணுகும் விதம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று பள்ளியிலிருந்து விடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்ற போது மாணவர்கள் மேடம் போகாதீர்கள் என கூறி கதறி அழுதனர். இதனை பார்த்ததும் வனஜா கண்ணீர் விட்டு அழுது மாணவர்களை சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.