தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ரஜினிகாந்த் காரில் செல்லும்போது தனது ரசிகர்களுக்கு கை அசைத்து வணக்கம் தெரிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தப் பதிவு ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கு அவர் செல்வதை உறுதிப்படுத்துகிறது. ஜெயிலர் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகி, உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படப்பிடிப்பு 2025 மார்ச் மாதம் தொடங்கியதாகவும், சென்னை, கோயம்புத்தூர், கேரளாவின் ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mr. Thoothukudi (@mrthoothukudi)