ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பூமிகா, அரியானாவின் குருகிராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பூமிகா, திங்கட்கிழமை இரவு விடுதியில் நடந்த மற்றொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், தனது அறைக்குச் சென்ற அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெகுநேரமாகியும் பூமிகா அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள், அவரது அறையைச் சோதனையிட்டனர்.
அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், மாணவிகள் பயத்தில் விடுதி காப்பாளரிடம் உடனடியாக தகவல் தெரிவித்தனர். வேகமாக வந்த காப்பாளர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மாணவி ஏதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கல்லுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
