பிரபல நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், தனது தந்தையான கமல்ஹாசன் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார். “அவருக்கு சினிமாவுக்காக எல்லாம் பெங்காலி மொழி கற்றுக்கொள்ள தேவையில்லை.

ஆனால், ஒரு காலத்தில் பிரபல பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது அவருக்கு காதல் ஏற்பட்டதுதான் காரணம். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் கதாபாத்திரத்திற்கு ‘அபர்ணா’ என பெயர் வைத்தார்,” என ஸ்ருதி தெரிவித்தார். இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.