இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு உழைத்து சம்பள உயர்வு பெறுகிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு இளைஞர் தனது பழைய சம்பள சீட்டை ஃபோட்டோஷாப்பில் எடிட் செய்து, 4 லட்சத்தை 7 லட்சமாக மாற்றினார். அதை வைத்து ஒரு புதிய நிறுவனத்திடம் 20% சம்பள உயர்வு கேட்டார். அதற்கு 8.5 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதே ஆஃபர் லெட்டரை காட்டி இன்னொரு நிறுவனத்தில் இன்டர்வியு சென்று, நேரடியாக 12 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கிவிட்டார்.
View this post on Instagram
இந்த சம்பவம் பற்றி ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானது. அதில் ஒருவர், “ப்ரோ, நீங்க எந்த ஸ்கிலும் கத்துக்காம, ஃபோட்டோஷாப்பில் சம்பளத்தை உயர்த்தி 4 லட்சத்திலிருந்து 12 லட்சம் கொண்டு வந்திருக்கீங்க… நீங்க கார்ப்பரேட் பாம்பு இல்ல, ‘கொப்ரா’ டா!” என்று கூற, அந்த வீடியோ வைரலாகி உள்ளது. இது குறித்து பலரும் கருத்து தெரிவிக்க, சிலர் “நிறுவனங்கள் ஊழலை செய்கிறது… இவர் பண்ணதும் அதே மாதிரி தான்” என ஆதரிக்க, மற்றொருபக்கம் சிலர் “இது மோசடி, இதுபோன்ற செயல் நீண்ட நாட்கள் நீடிக்காது” என கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது 6.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்று, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. சிலர் இதுபோன்ற முறையை முயற்சி செய்தபோது, பின்புல சரிபார்ப்பு நேரத்தில் சிக்கி வேலை இழந்ததையும் சம்பளம் குறைந்ததையும் பகிர்ந்துள்ளனர். “நான் இதே மாதிரி பண்ணேன், கம்பனிக்கு தெரிஞ்சு போச்சு… 4 லட்சம் சம்பளம் 2 லட்சமா மாறிடுச்சு” என ஒருவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
