ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே குலத்தின் திருமணம் ஆன உடனே மணமகனை 3 முறை கருப்பு சாட்டையால் அடித்தால் மட்டுமே திருமணம் முழுமையாகும் என நம்பப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கங்கம்மா கோவிலில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் 5 கருப்பு சாட்டைகள் இருந்தது. உடனே கோவிலுக்கு சென்று ஏதோ தவறு நடந்து விட்டதாக கூறி தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அவர்களது கனவில் கங்கம்மா தோன்றி உங்கள் குலத்தின் திருமணத்தின்போது மணமகனை மூன்று முறை கருப்பு சாட்டையால் அடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் காலம் காலமாக அந்த குளத்தில் மணமகன் தாலி கட்டியவுடன் வினோத சடங்கு பின்பற்றப்படுகிறது. இன்றும் மாப்பிள்ளை தாலி கட்டியவுடன் அவரை கருப்பு சாட்டையால் மூன்று முறை அடிக்கின்றனர். சமீபத்தில் மணமகனை குடும்ப உறுப்பினர்கள் சாட்டையால் அடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.