நாட்டுமுழுவதும் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகளே அதிகளவில் இருப்பதால், பொதுமக்கள் சில்லரைப் பணக்குறைபாட்டை சந்தித்து வருகிறார்கள்.
இதைத் தீர்க்கும் வகையில், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 75% ஏடிஎம்களில் குறைந்தபட்சம் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்கனவே வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும் பல ஏடிஎம்களில் 500 ரூபாயே நிறைந்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் போது பயன்படுத்தப்படும் காசெட்களை மாற்றி, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் தவிர்க்க முடியாதவாறு உள்ளிட வேண்டும் என ஆர்.பி.ஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற சில்லரை பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
