சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர், பிரபலமான பிலிங் கிட் நிறுவனத்தில் டெலிவரி பார்ட்னராக பணிபுரிந்து, தனது மாத வருமானத்தை ஒரு காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில், அவர் ஒரு மாதத்தில் சுமார் 62,000 ரூபாய் சம்பாதித்ததாகவும், அதற்காக 477.4 மணி நேரம், அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 16 மணி நேரம் உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
இளைஞரின் கடின உழைப்பு மற்றும் அவரது அர்ப்பணிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், இளைஞரின் உழைப்பு குறித்து பாராட்டு தெரிவித்தாலும், அவரது ஆரோக்கியம் குறித்து கவலைப்படவும் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
