விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரண் (வயது 29), கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை அழிக்க மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில், அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது, கடந்த 22ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, நேற்று முன்தினம் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.