வருகிற ஆண்டு இறுதியில் பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்யும் நோக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை நடத்தி வருகிறார்.
இதனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 27-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பீகார் மாநிலம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் பிரபல தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர், “முதல்வர் ஸ்டாலின் பீகார் வருவதால் இங்கு என்ன மாற்றம் ஏற்படப் போகிறது? பீகாரின் பிரச்சனைகள் பீகாரிலேயே தீர்க்க வேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, புலம்பெயர்ந்தோர் திரும்பும் நிலை ஆகியவையே நிஜமான தேவை.
ராகுல் காந்தியின் யாத்திரை பீகார் இளைஞர்களுக்குத் தீர்வு தராது” எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், “பீகாருக்கு இப்போது உண்மையில் தேவைப்படும் யாத்திரை என்பது வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும், பிரயோஜனம் இல்லாத யாத்திரைகளால் எந்த மாற்றமும் ஏற்படாது” என்றார்.
