டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 1 வயது குழந்தை ஒரு 32 வயது ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் தாயின் கூற்றுப்படி, அவர்களது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வசித்து வந்த ஒரு நபர், குழந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும், தாய் அவசரமாக அந்த அறைக்கு ஓடினார். ஆனால், அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, குழந்தை ஆடையின்றி, ரத்தத்தில் நனைந்த நிலையில் கிடந்தது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அடுத்து, குழந்தையின் குடும்பத்தினர் உடனடியாக கபாஷேரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து, குற்றவாளியான சுதிர் என்பவரை கைது செய்தனர்.
இவர் உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது காவல்துறை இந்த வழக்கை ஆழமாக விசாரித்து வருகிறது, மேலும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.
