சென்னை மாவட்டம் கோயம்பேடு 100 அடி சாலையில் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விடுதிக்கு சென்று ஒரு அறையில் சோதனை நடத்திய போது 15 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது உறுதியானது.

போலீசார் உடனடியாக அந்த சிறுமியை மீட்டனர். பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து சென்ற அஞ்சலி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சினிமா துணை நடிகையான நாகம்மா, நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சிறுமி தனது தாயின் தோழியான அஞ்சலி வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அஞ்சலி ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி பலருக்கும் விருந்தாக்கியது விசாரணையில் அம்பலமானது.