தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 100வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ இன்று (ஆக.22) மறுமுறை வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
கடலூரில் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நெய்வேலியில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்று இந்தப் படத்தை பார்த்தார். அவருடன் விஜயகாந்தின் சகோதரிமகன் சுதீஷ் மற்றும் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், விஜயகாந்தின் தோற்றம் தோன்றிய தருணத்தில், அவரை நினைத்து பிரேமலதா கண்கள் கலங்கினார் . பின்னர், விஜயகாந்தின் புகழை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் திரைப்படத்தை பார்வையிட்டனர். ரசிகர்களிடையேவும் இந்த ரீ-ரிலீஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Captain Prabhakaran | டைட்டில் கார்டு பார்த்ததும் கதறி அழுத பிரேமலதா விஜயகாந்த் – விஜயபிரபாகரன்#CaptainPrabhakaran #Vijayakanth #Premalatha #Vijayaprabakaran #TamilCinema #EmotionalMoment #Kollywood #TamilNews #mmnews #Maalaimalar pic.twitter.com/Rtljtjq5eS
— Maalai Malar தமிழ் (@maalaimalar) August 22, 2025
“>
