இன்றைய காலகட்டத்தில், வேலை நேரத்தில் உயிருக்கு ஆபத்தானர் செயல்கள் சிக்கலாகவே மாறிவருகின்றன. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு காணொளி இதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

அந்த வீடியோவில், ஒரு தொழிலாளி AC Outdoor Unit-ஐ தூக்கிக் கொண்டு, தரையில் மிகவும் சமநிலை அற்ற  கம்பிகளின் மீது வைக்கப்பட்டிருந்த ஒரு ஏணியை நம்பி உயரத்தில் ஏறுகிறார். மிகுந்த கவனத்துடன் அவர் மேலே ஏறிச் ஏசி- யை (AC Outdoor Unit) வைக்க முயற்சிக்கிறார்.

ஆனால், அதே நேரத்தில் கீழே இருந்த கம்பிகள் இடிந்து விழுந்ததால், ஏணியும் அவரும் சமநிலையை இழந்து உயரத்தில் இருந்து கீழே பரிதாபமாக நிலைதடுமாறி விழுந்தார். இந்த சோகம் சம்பவம்  முழுமையாக வீடியோவில் பதிவாகியிருப்பதால், அதை பார்த்த பார்வையாளர்கள் பதற்றம் அடைந்தனர். விழுந்த உடனே அவர் வலியால் கத்தும் காட்சி எல்லாம் ஒரே நேரத்தில் பலரது மனதை உலுக்கியது.

இந்த சம்பவம், தொழிலிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு அவசியமெனும் உண்மையை வலியுறுத்துகிறது. ஒருவரின் உயிர் பாதுகாப்பும், வேலை முறைகளிலும் சரியான  கட்டுப்பாடும் இல்லாத சூழலில், எந்த நேரத்திலும் விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கான  உதாரணமாக இது அமைந்துள்ளது.

இவ்வாறு சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள், பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாமல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன என்பது இந்த சம்பவத்தின் மூலம் மேலும் ஒருமுறை நமக்கு  உணர்த்துகிறது .

 

View this post on Instagram

 

A post shared by MAJID.MINISTER (@majid.minister)