மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. இதில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு, கடலோரங்களில் மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகளை தடுக்க தவறிய ஒன்றிய மற்றும் மாநில அரசை கண்டிக்கும் தீர்மானம் . ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையில் தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து, இதற்குக் காரணம் திமுக அரசு தான் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இந்த தீர்மானங்கள், தவெக கட்சி அரசியல் நிலைப்பாட்டையும், எதிர்கட்சிகளுக்கான வலுவான சவாலாகவும் பார்க்கப்படுகின்றன.