அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், ஏழை எளிய குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் “தாலிக்கு தங்கம்” திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருமண உதவித்தொகையாக 50,000 ரூபாயும், ஒரு பவுன் தங்கமும் மணப்பெண்களுக்கு வழங்கப்படும். இது ஏழை மக்களின் திருமண செலவுகளை குறைத்து, அவர்களின் வாழ்க்கையில் புதிய பொலிவை ஏற்படுத்தும் மகத்தான முயற்சியாகும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் மணப்பெண்ணுக்கு பட்டுப் புடவையும், மணமகனுக்கு பட்டு வேஷ்டி மற்றும் சட்டையும் வழங்கப்பட உள்ளது. இது திருமணத்தை மேலும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட உதவும். இந்த தகவலை அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.