உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், அதன் அழகிற்கும், கட்டிடக்கலைக்கும் மட்டுமல்லாமல், அதன் மர்மங்களுக்கும் பெயர் பெற்றது.

சமீபத்தில், இந்த பிரமாண்ட கட்டிடத்தின் உள்ளே உள்ள ஒரு ‘அனுமதி இல்லாத பகுதியில்’ யாரும் எதிர்பாராத வகையில் புகுந்து, அதன் ரகசிய முகத்தை வெளிக்கொணர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @bobbykhan2786 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்ட இந்த வீடியோவில், ஒரு நபர் தாஜ்மஹாலின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி, நிலத்தடி அறைக்குள் நுழைகிறார். அங்கு தான் மும்தாஜ் மஹால் மற்றும் ஷாஜகானின் உண்மையான கல்லறைகள் உள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த வீடியோ மே 5ஆம் தேதி பதிவேற்றப்பட்டது. தற்போது வரை இதை 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பொதுவாக சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலில் பார்ப்பது போலி நினைவுச்சின்னக் கல்லறைகளே என்ற பல தகவல்களுக்கு இந்த வீடியோ ஒரு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. உண்மையான கல்லறைகள் கீழே உள்ள ரகசிய அறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அறை பொதுமக்களுக்கு திறக்கப்படுவதில்லை. சில அரசு அனுமதியுடன், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இப்பகுதி திறக்கப்படுகிறது. அந்த ரகசியமான இடத்துக்குள் நுழையும் இந்த வீடியோ தான் தற்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bobby Khan (@bobbykhan2786)

“>

இந்த வீடியோவில் மேலும் கவனம் ஈர்த்த ஒன்று, பின்னணியில் இசைக்கும் முகமது ரஃபியின் இசை. ரஹீன் குரலுடன் இணைந்த அந்த காட்சிகள் காணும் ஒவ்வொருவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. ஒருவேளை இதுவே அந்த வீடியோவின் உணர்வுப்பூர்வ வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.  மேலும், பலரும் இது போல திடீரென தாஜ்மஹாலின் ரகசியங்களை வெளிக்கொணரும் வீடியோக்கள் தொடர்ந்தும் வெளியாகலாம் என எதிர்பார்க்கிறார்கள்.