மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிட்கோ பகுதியில் தெருநாய் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை வழியாக சென்று கொண்டிருந்த முதியவரை திடீரென ஒரு தெருநாய் பாய்ந்து முகத்தில் கடித்தது.
இதனால் அவர் பலத்த காயமடைந்தார். அந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த முதியவருக்கு அருகிலிருந்தவர்கள் உடனடியாக உதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரது முகத்தில் பல தையல்கள் போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் உயிர் பிழைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
आवारा कुत्ते ने बुज़ुर्ग पर किया हमला, देखें CCTV
महाराष्ट्र : छत्रपति संभाजीनगर के सिडको इलाके में एक आवारा कुत्ते ने बुज़ुर्ग व्यक्ति पर हमला कर चेहरे पर काट लिया. स्थानीय लोगों के मुताबिक वह इस तरह के हमले का 14वां शिकार हैं.#maharashtra | #dogbites | #video | #dog | #india… pic.twitter.com/wWTGJCua6b
— NDTV India (@ndtvindia) August 19, 2025
“>
இந்நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வரும் நிலையில், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குழந்தைகள், முதியவர்கள் தெருவில் செல்ல கூட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பலமுறை புகார் அளித்தும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கோபம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்று வருகிறது.
