ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் இருக்கும் ஸ்விகி (Swiggy) தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 17 சதவீதம் அதிகரித்து ரூ.12 இல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது. அதிக தேவை உள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஸ்விகி விளக்கியுள்ளது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் வெறும் ரூ.2 ஆக இருந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், ஸ்விகியின் போட்டியாளரான Zomato தற்போது ரூ.10 மட்டுமே பிளாட்ஃபார்ம் கட்டணமாக வசூலித்து வருவதால், வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.