உத்தரப்பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள மார்குண்டி பள்ளத்தாக்கில் பெரும் சாலை விபத்து சம்பவித்துள்ளது. சத்தீஸ்கர் நோக்கி டீசல் ஏற்றி சென்ற லாரி, மார்குண்டி பள்ளத்தாக்கில் திடீரென பிரேக் பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் டேங்கரில் இருந்த சுமார் 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் சிந்தியது. ஓட்டுநர் சந்தீப் குப்தா நூலிழையில்  உயிர்தப்பினார். ஆனால் கலாசி அரவிந்த் யாதவ் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

விபத்துக்குப் பிறகு, சாலையில் வடிந்த  டீசலைக் கேன்கள், வாளிகள், பாட்டில்கள் ஆகியவற்றில் நிரப்புவதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் குவிந்தனர். இது மக்கள் பீதி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியது. டீசல் கசிவால் சாலையில் சிலர் சறுக்கி விழுந்தும் லேசான காயங்களுக்கு ஆளானார்கள். சம்பவம் நடந்ததற்குப் பிறகு, அரை மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசும் தீயணைப்பு துறையும் துரிதமாகச் சென்று சம்பவ இடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சாலையில் உள்ள டீசலை அகற்றி போக்குவரத்தை மீட்டனர்.

“>

 

இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை மார்குண்டி பள்ளத்தாக்கின் ஆபத்தான நிலையை வெளிக்கொணர்கிறது. கடந்த காலத்திலும் இப்பகுதியில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இந்த இடத்தை “விபத்துக்களின் ஹாட்ஸ்பாட்” எனக் கூறுகின்றனர். இனி இப்பாதையில் கனரக வாகனங்களை அனுப்பும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.