திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி வெளிவட்ட சாலையில் இரவு நேரத்தில் பிரசவ வழியில் பெண் ஒருவர் துடித்துள்ளார். இந்நிலையில் பிரசவ வழியில் துடித்த பெண்ணை அழைத்து மருத்துவமனைக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. இதனால் ரோந்து பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி கோகிலா பிரசவம் பார்த்துள்ளார். கோகிலா ஏற்கனவே நர்சிங் படித்திருந்ததால் ஆபத்தில் உதவி செய்ய முன் வந்தார். இதனால் ஒடிசாவை சேர்ந்த பெண்ணை காப்பாற்ற முடிந்தது.
