திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிவி பட்டறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்ய தூய்மை பணியாளருக்கு மாணவர்கள் உதவி செய்ததாகவும், தகவல் அறிந்து மாணவர்களை உடனே வகுப்பறைக்கு அனுப்பி விட்டதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
