புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை முருகன் கோவில் கோபுரத்தில் ஏறி ஆறுமுகம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரான ஆறுமுகம் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன் பிறகு சிற்பங்களை பிடித்து கீழே இறங்க முயன்ற போது ஆறுமுகம் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.