சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ மக்கள் மனதை பதற வைத்துள்ளது. சாலையோரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஒரு பெரிய காளையை, கவனக்குறைவாக வந்த கார் நேரடியாக மோதியது. மோதிய பிறகு வாகனம் நின்றுவிடாமல், காளையை பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இந்த சம்பவத்தில் காளை கடுமையாக காயமடைந்து, எழுந்திருக்க கூட முடியாமல் தவிக்கிறது. இதை கண்ட கலங்காத மணமும் கலங்கி போகும்.!! அளவிற்கு
இந்த வேதனையான சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வீடியோவில், சாலையில் சும்மா அமர்ந்திருந்த காளையை, ஓட்டுநர் எந்த கவனமுமின்றி மோதி விடுகிறார். பின்னர் காளை எழுந்திருக்க பலமுறை முயன்றும் முடியாமல் தரையில் விழுந்து நடக்க முடியாமல் தவிக்கிறது. இந்த காட்சி, சமூக வலைதளங்களில் பதிவாகியதும், மில்லியன் கணக்கானோர் பார்த்து, ஓட்டுநரின் கவனக்குறைவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
“अगर गाड़ी सड़क पर बैठे सांड पर लैंड हुई है, तो ये ड्राइवर ही होगा, क्योंकि पायलट तो प्लेन उड़ाता है, गाड़ी नहीं।”
कैसे कैसे ड्राइवर है इतना बड़ा सांड भी नहीं दिखा । pic.twitter.com/mKFHdz7qH9
— Anwar Ali (@Anwarali_0A) August 13, 2025
“>
இந்த வீடியோவை ட்விட்டரில் @Anwarali_0A என்ற ஐடி பகிர்ந்துள்ளார். “இவ்வளவு பெரிய காளையை கூட பார்க்காமல் மோதும் ஓட்டுநர் எப்படி சாலையில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெறும் 30 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வீடியோவை கண்ட நெட்டிசன்கள், “கண்களை மூடிக்கொண்டு காரை ஓட்டுகிறார்களா?”, “இப்படி கவனக்குறைவால் மனித உயிர்களையும் பறிக்கிறார்கள்” என்று கோபம் தெரிவித்துள்ளனர். சிலர், “சாலை விலங்குகள் பிரச்சனை என்றாலும், வாகனம் ஓட்டும் போது ஓட்டுநரின் கவனம் முக்கியம்” எனக் கூறியுள்ளனர்.
