பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பிறந்தநாள் நபர் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தான். திடீரென, அவர் கைகளில் இருந்த கேக் முகத்திற்கு அருகில் வெடித்து சிதறியது. அதிர்ச்சியில் பீதியடைந்த அவர் திணறி அங்கிருந்து ஓடிப் போய், நேராக நீச்சல் குளத்தில் குதித்த காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த காட்சி நண்பர்கள் திட்டமிட்ட ஒரு குறும்பு என கூறப்படுகிறது. வீடியோவில் நபரின் எதிர்வினையை பார்த்து நண்பர்கள் சிரிப்பது தெளிவாகக் கேட்கிறது. ஆனால், கேக் முகத்தில் நேரடியாக வெடித்திருந்தால், அது விபத்தாக மாறியிருக்கும் என நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற “ஆச்சரியங்கள்” செய்யும்போது பாதுகாப்பை மறக்கக் கூடாது என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை நியூஸ்ஃப்ளேர் ராய்ட்டர்ஸ் கனெக்ட் வெளியிட்டதும், அது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இதைப் பார்த்து கருத்து பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதை “மறக்க முடியாத பிறந்தநாள் ஆச்சரியம்” என நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளதுடன், சிலர் “நபரின் உயிருக்கு ஆபத்தான செயல்” என கண்டித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
