ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “கூலி” திரைப்படம் கேரளா பாலக்காட்டில் 10 திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, கேரள மாநிலம் பாலக்காட்டில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘ஏ’ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன. அடுத்த 3 நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன. இதனிடையே நேற்று படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இந்தப் படம் எல்சியுவில் வராது, ரஜினிக்கான பிரத்யேகமான கதையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “கூலி” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி வருகிறது. கூலி திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் ரஜினியை போல வேடம் அணிந்து திரையரங்குகளில் நடனமாடியுள்ள காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.