சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
