தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை (Heavy Rain Alert) விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைநகரான சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

​மேலும், நாளை தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் வானிலை மாற்றம் காரணமாகக் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கக்கடலில் நிலவும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.