தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த தனது தனிச்செயலாளர் செந்தில்குமார் உடன் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவின் தேர்தல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியும் உடன் இருந்துள்ளார். புதிய அமைச்சரவையில் யாருக்கு எந்தெந்த இலாகாக்களை (அமைச்சர் பதவிகளை) ஒதுக்குவது என்பது குறித்து இந்த சந்திப்பில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

​ஆளுநரைச் தனிச்செயலாளர் சந்தித்ததன் பின்னணி மற்றும் அடுத்தகட்ட அரசு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் இந்த கூட்டத்தில் விரிவாகக் கேட்டறிந்துள்ளார். தேர்தல் ஆலோசகருடன் இணைந்து அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் நீலாங்கரை இல்லத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில், நீலாங்கரையில் நடந்துள்ள இந்த மெகா ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.