இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் கோயிலின் பின்னே குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. இந்த குரங்கை பார்த்த ஒரு குழந்தை அதனிடம் செல்ல வேண்டும் என்று கூறியது. இதனால் அவரது தாயார் அவரை தூக்கிக்கொண்டு குரங்கிடம் அழைத்துச் சென்றார். இதையடுத்து அந்த குழந்தை குரங்கின் காலை தொட்டு கும்பிட்டு சிரித்தது.
இதையடுத்து சும்மா இருந்த குரங்கு குழந்தையின் தலை முடியை பிடித்து கீழே இழுத்துப் போட்டது. இதில் அந்த குழந்தை அழ தொடங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
