உத்தர பிரதேச மாநிலம் பல்ல்ராம்பூரில் 21 வயது காது கேளாத வாய் பேச முடியாத இளம் பெண் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்களால் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், பெண் உயிர் தப்பிய நிலையில், உடனடியாக போலீசில் புகார் அளித்தார். அந்த பெண்ணை காப்பாற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹர்ஷித் பாண்டே மற்றும் அஞ்சூர் வர்மா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை விரைவான நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இப்படியான சம்பவங்கள் தொடர்வது பெண்கள் பாதுகாப்பு நிலைமை மீதான கேள்விகளை எழுப்பி, வன்முறை தடுக்கும் கடுமையான சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.