அம்ரோஹாவின் அல்லிபூர் பகுதியில் உள்ள சாலையில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த தெரு நாய் திடீரென சிறுவனின் மீது பாய்ந்து அவரது காலை கடித்தது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

 

இதையடுத்து அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் குழந்தையின் காலை கடித்த நாயிடம் இருந்து சிறுவனை மீட்டனர். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.