கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் காட்டுப்பன்றிகள் மோதி பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் பெண் ஒருவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஒரு பகுதியில் இருந்து வேகமாக வந்த காட்டுப்பன்றைகளின் கூட்டம் ஒன்று அவர் மீது மோதியதில் பைக் நிலை தடுமாறி அந்தப் பெண் சாலையில் விழுந்தார்.
கேரளா – திருவனந்தபுரம் : சாலையின் குறுக்கே வந்த காட்டு பன்றி ஒன்று, பைக்கில் மோதியதில் பெண் கீழே விழுந்து காயம் pic.twitter.com/f9kcKMINlB
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) August 9, 2025
இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவத்திற்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில் பைக்கில் வந்த பெண்ணின் பெயர் நிஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலையில் இது போன்று விலங்குகள் திடீரென குறுக்கே வருவது பெரும் விபத்தை ஏற்படுத்துகிறது என்பதை அந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது.
